Sunday 20 March 2016

உலக தரலோக்கல் 'ஜித்து ஜில்லாடி' பாடல் விமர்சனம்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல்கள் இன்று மாலை சென்னையில் வெளியாகவுள்ள நிலையில் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற உலக தரலோக்கல் பாடல் இணையதளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'தெறி' தீம் மீயூசிக்குடன் ஆரம்பமாகும் இந்த பாடல் தேனிசை தென்றல் தேவா குரலில் செம குத்துடன் தொடர்கிறது.
'தொப்பியில சிங்கத்தை பாரேன்,
தோளில ஸ்டார் வாங்கனும் போலீஸ்காரன்
என்று போலீஸ் பெருமையுடன் இந்த பாடல் நீடிக்கின்றது.
உன்னை போல ஆளை அடிக்க
எடுக்கணும் பிரம்பு
ஒண்ணு வச்சா தாண்டா
தப்பு செய்ய தோணாது திரும்ப
என்று ரெளடிகள் மீது காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளும் இந்த பாடலில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
போற வர்ற பொண்ணுங்கள
எங்கனா நீ தொட்டா
உன் கையை ஒடச்சி
போட்டுருவேன் புத்தூர் மாவு கட்ட
என்ற வரிகளில் பெண்களிடம் வாலாட்டும் சமூக விரோதிகளை பதம் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சூப்பர் மேனு, ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா,
நீ குரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணிமா..
என்ற வரிகள் பெண்கள் குரல் கொடுத்தால் அவர்களை காக்க போலீஸ் உடனே வரும் என்பதை உணர்த்துகிறது.
நல்ல நாளிலயும் வீட்டுல தங்கல
கொண்டாட முடியல நாங்க தீபாளி பொங்கல
என்ற வரிகளில் காவல்துறையினர் ஓய்வின்றி பொதுமக்களுக்காக உழைக்கும் நிலையை உணர்த்துகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ரோகேஷ் பாடல் வரிகளில் தேவா மற்றும் பாலசந்திரன் பாடியுள்ள இந்த பாடல் கண்டிப்பாக திரையில் தோன்றும்போது ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க அதிக வாய்ப்பு உள்ளது. வரும் ஏப்ரல் 14-ல் இந்த பாடலை திரையில் கண்டு ரசியுங்கள்...

No comments:

Post a Comment